இந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறார்,..திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியை விமர்சித்த பாஜக தலைவர்.! 

இந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறார்,..திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியை விமர்சித்த பாஜக தலைவர்.! 

திரிணாமுல் காங்கிரஸ்  எம்.பி நஸ்ரத் ஜஹான்  இந்திய கலாச்சாரத்தையே இழிவுப்படுத்துவதாக பாஜக தலைவர் திலீப் கோஷ் சாடியுள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பியான நஸ்ரத் ஜஹான், ஓராண்டுக்கு முன் துருக்கி தொழிலதிபர் நிகில் ஜெயினை திருமணம் செய்திருந்தார். ஆனால் தனக்கு இந்திய சட்டப்படி திருமணம் நடக்கவில்லை என்பதால், விவாகரத்து வாங்க வேண்டிய அவசியமில்லை என அண்மையில் பேட்டியளித்திருந்தார். 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்துப் பேசிய பாஜக தலைவர் திலீப் கோஷ்  
"நஸ்ரத் ஜஹானின் அவரது கூற்று, திரிணாமுல் காங்கிரஸின் சித்தாந்தமாக இருக்கலாம் என்றும் இந்திய நாட்டின் சித்தாங்கம் அல்ல" என்றும் கூறியுள்ளார்.