பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்.. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் பங்கேற்பு!!

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்.. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சிகள் பங்கேற்பு!!

நாட்டின் 15வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜீலை 18ம் தேதி நடைபெற உள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திரெளபதி முர்மு தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் முன்னிலையில் மாநிலங்களவை செயலளரிடம் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் திரௌபதி முர்முவுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு தரும் எனத் தெரிவித்தார்.