பைக் ஓட்டுநரை தாக்கிய பஸ் ட்ரைவர் வீடியோ வைரல்...

சாலையில் முந்தி செல்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்றவரை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பைக் ஓட்டுநரை தாக்கிய பஸ் ட்ரைவர் வீடியோ வைரல்...

கர்நாடகா | பெங்களூர் அருகே எலஹங்கா பகுதியில் சந்தீப் என்பவர் தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரை கர்நாடக அரசு பேருந்து முந்தி செல்ல முயன்று உள்ளது. இதனால் சந்தீப்க்கும், பேருந்து ஓட்டுநர் ஆனந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | ஊருக்குள் புகும் வனவிலங்குகள்...! அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..!

இதில் சந்தீப் தனது நடுவிரலை உயர்த்தி பேருந்து ஓட்டுனைரை செய்கையில் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவும் சந்தீப் பேருந்தில் ஏறி ஓட்டுனர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுநர் ஆனந்த் சந்தீப்பை பேருந்துக்குள் வைத்து கடுமையாக தாக்கினார்.

மேலும் படிக்க | கல்லூரி பேருந்தில் மாணவிக்கும் ஆசிரியைக்கும் மோதல்..வைரலாகி வரும் வீடியோ...

பேருந்து ஓட்டுநர் ஆனந்த் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பேருந்து ஓட்டுநர் ஆனந்தை கர்நாடக அரசு பேருந்து கழகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது. மேலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளர்.

மேலும் படிக்க | விஜய் படக்குழு மேல் புகார்... பத்திரிக்கையாளர் மேல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு...