சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கு விருது - பிரதமர் மோடி வழங்குகிறார்

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கு பிரதமர் மோடி நாளை விருது வழங்குகிறார்.

சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கு விருது - பிரதமர் மோடி வழங்குகிறார்

டெல்லியில் குடிமைப்பணிகள் நாளையொட்டி பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கான விருதுகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் இந்த நிகழ்ச்சியானது நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் ஜன் பகிதாரி, விளையாட்டு இந்தியா, பிரதமர் ஸ்வநிதி, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் மற்றும் தடையற்ற முழுமையான சேவைகள் வழங்குதல் உள்ளிட்ட 5 முன்னோடி திட்டங்கள் மற்றும்  புதுமையான வழிமுறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காகவும் 16 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கு  பிரதமர் விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.