ரயில் விபத்து நடந்த இடத்தில்... மீண்டும் ரயில் சேவை!

ரயில் விபத்து நடந்த இடத்தில்... மீண்டும் ரயில் சேவை!

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்ததில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் 275 போ் உயிாிழந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் போா்க்கால அடிப்படையில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. தொடா்ந்து 51 மணி நேர சீரமைப்பு பணிக்கு பின்னா் தெற்கு நோக்கிய வழித்தடத்தில் சோதனை ஓட்டமாக சரக்கு ரயில் போக்குவரத்தை அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ் தொடங்கி வைத்தாா். 

இதனைத் தொடர்ந்து மொத்தமுள்ள 4 வழித்தடங்களில், சீரமைக்கப்பட்ட இரண்டு வழித்தடங்களில் மட்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க:சிக்கிய அரிக்கொம்பன்! மக்கள் நிம்மதி!