அசாம் வெள்ள பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு!!

அசாம் வெள்ள பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. 

அசாம் வெள்ள பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு!!

அசாமில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது மழை ஓரளவு ஓய்ந்து நிலைமை சீரடைந்து வரும் போதிலும் நேற்று மழை வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வெள்ள பாதிப்புக்கு 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான பர்பெட்டா மாவட்டத்தில் சுமார் ஏழு லட்சம் பேர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நாகோன் மாவட்டத்தில் 5 லட்சத்து 13 ஆயிரம் பேரும், கச்சார் மாவட்டத்தில் 2 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் கிட்டதட்ட 74 ஆயிரத்து 706 ஹெக்டேர் நிலப்பிலான விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்து நாசமடைந்துள்ளன.