முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா அசோக் கெலாட்!!!

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா அசோக் கெலாட்!!!

காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் கட்சித் தலைவராக வரக்கூடாது என்று ராகுல் காந்தி தெளிவாக கூறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராகுல்- கெலாட்

இந்திய ஒற்றுமை பயணத்தின் பதினைந்தாவது நாளில் கேரளாவில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட். 

நிலைப்பாட்டில் உறுதியான ராகுல்:

"காங்கிரஸ் தலைவராக மீண்டும் வர வேண்டும் என்ற அனைவரின் விருப்பத்தையும் ஏற்கும்படி நான் அவரிடம் பலமுறை கேட்டுக் கொண்டேன். காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அடுத்த தலைவராக வரக்கூடாது என்று தான் முடிவு செய்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்று கெலாட் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் 'அவர்கள் நான் தலைவராக வேண்டும் என்று விரும்புகிறார்கள் என எனக்கு தெரியும்.  அவர்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன். ஆனால் சில காரணங்களுக்காக, காந்தி அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன்," என்று ராகுல் தெளிவாக கூறினார் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் ஒரு பதவி:

20 ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவருக்கு தயாராகி வரும் நிலையில், கெலாட் ராகுல் காந்தியின் முக்கியத் தேர்வாகக் கருதப்படுகிறார்.

71 வயதான காங்கிரஸ் மூத்த தலைவர், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயங்குவதால் இரண்டு பொறுப்புகளையும் தன்னால் கையாள முடியும் என்று அவர் ராகுலிடம் பரிந்துரைத்திருந்தார்.  ஆனால் ராகுல் காந்தி ”ஒரு நபர் ஒரு பதவி” என்ற கொள்கையை கூறி பரிந்துரையை மறுத்துவிட்டார்.

ராஜினாமாவும் மனுவும்:

26ம் தேதி அல்லது 27ம் தேதி காங்கிரஸ் தலைவருக்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் அசோக் கெலாட் தனது முதலமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். 

காந்தி குடும்ப தேர்வு:

காந்தி குடும்பத்தினர் தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்க விரும்பம் தெரிவித்ததால் கட்சியின் வளர்ச்சி மற்றும் ஆளும் பாரதீய ஜனதா கட்சியை எதிர்கொள்ள அசோக் கேலட் தான் தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானவர் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விரும்பியதால் இந்த முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: காங்கிரஸ் தலைமை தேர்தல்!!! முதல் முறையாக மௌனம் கலைத்த ராகுல்!!!