சிக்கிம்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்...16 பேர் உயிரிழப்பு!

சிக்கிம்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்...16 பேர் உயிரிழப்பு!

வடக்கு சிக்கிம் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் உட்பட  16 வீரர்கள் மரணமடைந்தனர். 

ராணுவ வீரர்கள் மரணம்:

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் சிமா என்னும் மலைப்பகுதியில் மிகவும் குறுகலான பாதையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது. சாலையோரத்தில் இருந்த செங்குத்தான பள்ளத்தில் அந்த வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரிகள் 3 பேர் உட்பட ராணுவ வீரர்கள் 16 பேர் மரணம் அடைந்தனர். 4 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க: ”ஆடு நனைந்தால் ஓநாய் அழுவது போல” அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்மந்தம்? ஜெயக்குமார் கேள்வி 

இரங்கல் தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர்:

இதனிடையே, மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வீரர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக தேசம் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.