இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும்...

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும்...

டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஆதரிப்பது, கவலை அளிப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் கவலையை தற்போது பொறுப்புள்ள நாடுகள் உணர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாம்களுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியது, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா ராணுவத்துடன் நேரடியா மோதியது உள்ளிட்ட சம்பவங்கள் அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும் ராஜ்நாத் கூறினார்.  

ஆப்கானிஸ்தானில் நடக்கும் அண்மைக்கால நிகழ்வுகள் தற்போது இந்திய பிராந்தியத்திலும் எதிரொலிப்பதாக ராஜ்நாத் கவலை தெரிவித்தார். அனைத்து நாடுகளுடன் அமைதியையும், நன்மதிப்பையும் பேணுவதில் இந்தியா முனைப்புடன் இருப்பதாக கூறிய அவர், உள்நாட்டு பாதுகாப்புக்கும் எல்லை பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும் கூறினார். நாட்டின் பாதுகாப்புக்காக எதிர்கால ராணுவ உத்திகள், நடவடிக்கைகளில் முப்படைகளும் இணைந்து செயல்படுவது அவசியம் எனவும் அவர் கூறினார்.