குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முக்கு ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆதரவு!
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முக்கு ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆதரவு வழங்கியுள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தல் ஜுலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு வெற்றி பெற வேண்டுமானால் எதிர்கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அம்மாநில அரசு ஆதரவு உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் திரௌபதி முர்முக்கு ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
இது குறித்து ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எப்போதும் அளித்து வரும் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியாக திரௌபதி முர்முக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.