காஷ்மீர் சென்ற அமித்ஷா...பஹாரி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு!

காஷ்மீர் சென்ற அமித்ஷா...பஹாரி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும் மொழிக்குழு இனமான பஹாரி இன மக்களுக்கு, இனி பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படுவதைப் போல கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமித்ஷா, ரஜோரி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கும், குஜ்ஜார், பகர்வால் மற்றும் பஹாரி இன மக்களுக்கு விரைவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு இங்கு அனைவரும் தங்களது உரிமையை பெற முடிகிறது என்றதோடு, தற்போது புதிதாக வழங்கப்பட உள்ள இட ஒதுக்கீட்டால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com