"புதிய நாடாளுமன்ற கட்டிடம், மோடிதான் திறந்து வைப்பார்" அமித்ஷா திட்டவட்டம்!

"புதிய நாடாளுமன்ற கட்டிடம், மோடிதான் திறந்து வைப்பார்" அமித்ஷா திட்டவட்டம்!

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு 19 எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வரும் 28ம் தேதி கட்டிடத்தைத் பிரதமர் மோடி தான், திறந்து வைப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

970 கோடி ரூபாய் செலவில் 1220 எம்பிக்கள் அமரும் வகையில், டெல்லியில் நாடாளுமன்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சாவர்க்கரின் பிறந்தநாளன்று கட்டிடம் திறக்கப்படுவதற்கும், குடியரசுத்தலைவர் விழாவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியும், கட்டிடத் திறப்பு நிகழ்வை புறக்கணிப்பதாக 19 எதிர்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. 

காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, உத்தவ்தாக்கரேவின் சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆர்.ஜே.டி, என்.சி. பி உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இதில், குடியரசுத்தலைவர் இல்லாமலேயே நாடாளுமன்றம் திறக்கப்படுவது கண்ணியமற்ற செயல் எனவும், நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா நசுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டிடத்திற்கு மதிப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.  

இந்நிலையில், இன்று டெல்லியில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, 28ம் தேதி பிரதமர் மோடி தான் நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைப்பார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழில் செங்கோல் என அழைக்கப்படும் அதிகாரப் பரிமாற்ற ஆயுதம், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்படும் என குறிப்பிட்ட அவர், முன்னாள் பிரதமர் நேருவால், செங்கோல் முன்னதாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்!