தாமரை சின்னத்திற்கு பெயிண்ட் அடித்த அமித் ஷா..!

தாமரை சின்னத்திற்கு பெயிண்ட் அடித்த அமித் ஷா..!

கர்நாடகாவில் வீட்டின் சுவற்றில் தாமரை சின்னத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர்ணம் பூசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பாஜக உள்பட அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெலகாவி மாவட்டம் கித்தூரில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, தார்வாட் பகுதியில் வீட்டின் சுவற்றில் தாமரை சின்னத்திற்கு அவர் வர்ணம் பூசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.