ஜல் ஜீவன் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்-அமைச்சர் பெரியகருப்பன்

ஜல் ஜீவன் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்-அமைச்சர் பெரியகருப்பன்

4-வது நிதி ஆணையத்தின் செயலாக்க மானிய நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய  அமைச்சர் கிரிராஜ் சிங்கை நேரில் சந்தித்து, அமைச்சர் பெரியகருப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெரியகருப்பன், ஊரக வளர்ச்சியை பொறுத்தமட்டில் மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரிவித்தார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், 14-வது நிதிக்குழு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்ததாகவும் கூறினார். ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.