சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் ரத்து.. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரவு!!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் சீனார்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விசாக்களையும் இந்திய அரசு ரத்து செய்துள்ளது.

சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் அனைத்தும் ரத்து.. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரவு!!

கொரோனா பரவல் மூன்று அலைகள் முடிந்துள்ள நிலையில தற்போது சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் சீனாவின் பல்வேறு நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சீனாவில் இருந்து வெளியேறிய 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீண்டும் சீனா வர அந்நாடு தயக்கம் காட்டி வருதுகிறது. இந்நிலையில் சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான விசாக்களும் செல்லாது என இந்தியா விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய மாணவர்களை மீண்டும் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் -யீ இடம் வலியுறுத்தியுள்ளார்.