பிப்ரவரி 1க்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்...!

பிப்ரவரி 1க்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்...!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு  டெல்லியில்  அனைத்துக்கட்சிக் கூட்டம்  தொடங்கி நடைபெற்றது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் :

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின்  கூட்டு கூட்டத்தில்  நாளை முதல் நாளில், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து 2023 முதல் 2024ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை, பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். 

இதையும் படிக்க : ஈபிஎஸ்-யை மறுக்கும் தேர்தல் ஆணையம்... உடனே நீதிமன்றம் சென்ற எடப்பாடி...உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

அனைத்துக் கட்சி கூட்டம் :

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்தார். 

அதன்படி நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் இன்று  அனைத்து கட்சி கூட்டம்  நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய முக்கியப் பிரச்னைகள் தொடர்பாக எதிர்கட்சிகள் வலியுறுத்தின.