கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மதுபானத்திற்கு 10% தள்ளுபடி..!

மதுபிரியர்களுக்கு இடியாய் விழுந்த மாநில அரசின் உத்தரவு..!

கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மதுபானத்திற்கு 10% தள்ளுபடி..!

tஇந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் போதிலும் கூட, 3-வது அலையை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதில் சுகாதாரத்துறை உறுதியாக உள்ளது. மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்த வைப்பதற்காக, மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளையும், கட்டுப்பாடுகளையும் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், 

மத்திய பிரதேசத்தில் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையில் மது பானங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் மண்ட்சூர் நகரில் உள்ள மூன்று மதுபானக் கடைகளில் தடுப்பூசியின் முழு அளவை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்து 10 சதவீத தள்ளுபடி விலையில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம் என கலால் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த தள்ளுபடி அறிவிப்பு மதுபிரியர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும், மது பழக்கத்தை அரசு ஊக்குவிப்பதாக சிலர் விமர்சித்து வருகின்றனர்.