ஹிஜாப் சர்ச்சை.. வீடியோ வெளியிட்ட அல்கொய்தா தலைவர்.. உண்மை தன்மை குறித்து ஆராய காவல்துறைக்கு உத்தரவு

ஹிஜாப் சர்ச்சை தொடர்பான அல்கொய்தா தலைவர் வெளியிட்ட வீடியோ குறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஹிஜாப் சர்ச்சை.. வீடியோ வெளியிட்ட அல்கொய்தா தலைவர்.. உண்மை தன்மை குறித்து ஆராய காவல்துறைக்கு உத்தரவு

ஹிஜாப் சர்ச்சை குறித்து அல்கொய்தா தலைவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராய கவால்துறைக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களுக்குள் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தான், அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கர்நாடகத்தில் நிலவும் ஹிஜாப் பிரச்சனை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹிஜாப் தடைக்கு எதிராக கோஷமிட்ட மாணவி முஸ்கானை அவர் தனது வீடியோ பதிவில் பாராட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோ குறித்த உண்மை தன்மை குறித்து ஆராய அம்மாநில கவால்துறைக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.