அஃப்தாபுக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்...

காதலியை படுகொலை செய்த வழக்கில் கைதான அஃப்தாபுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அஃப்தாபுக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்...

டெல்லியில் திருமணம் செய்யாமல் தன்னுடன் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா என்ற காதலியை அஃப்தாப் என்ற நபர் 35 துண்டுகளாக வெட்டி வீசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், உண்மை கண்டறியும் பாலிகிராப் மற்றும் நார்கோ சோதனை அஃப்தாபுக்கு மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஷ்ரத்தாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து வீடியோ கான்ஃபரசிங் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் இன்று அஃப்தாப் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ”அவள் 35 துண்டுகள் நீ 70 துண்டுகள்” தொடரும் கொலை மிரட்டல்கள்!!!