மெய் சிலிர்க்க வைத்த போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள்..!

இந்திய கடற்படை நாளையொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
கடற்படை தினம்:
1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது டிசம்பர் 4-ம் தேதி பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தில் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்க்கப்பலை தாக்கி அழித்தனர். இந்த நாள் கடற்படை தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. முதன் முதலாக இந்த ஆண்டு டெல்லி இல்லாத பிற பகுதியான ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கிழக்கு துறைமுக தளத்தில் உற்சாகத்துடன் தொடங்கியது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இதையும் படிக்க: அய்யோ இனி கோயில்ல செல்ஃபி எடுக்க முடியாதா...நீதிமன்றம் உத்தரவு என்ன?!!!
சாகச நிகழ்ச்சி:
சூரியன் மறைவின் போது டேங்கர்கள், நீர்முழ்கி கப்பல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மெல்லிய இசையுடன் காட்சியளித்ததை அனைவரும் கண்டு வியந்தனர். போர் விமானங்களை தேசியக் கொடி மற்றும் கடற்படை கொடியை தாங்கி சென்ற வானில் நடத்திய சாகசங்களும், மின்னல் வேகத்தில் பறந்து ஹெலிகாப்டர்கள் தூவிய வண்ணப்பொடிகளும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
இதே போல் கடற்படை நாளையொட்டி முப்படை வீர ர்களின் அணிவகுப்பும், வெற்றியை கொண்டாடும் இசை நிகழ்ச்சியும் உற்சாக நடைபெற்றது.