இந்தியாவை வல்லரசாக்க ஆதித்யநாத் அழைப்பு......

இந்தியாவை வல்லரசாக்க ஆதித்யநாத் அழைப்பு......

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின் போது குறிப்பிட்ட ஐந்து தீர்மானங்களியும் மனதி கொண்டு செயலாற்ற வேண்டும் என உத்திர பிரதேச முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ஐந்து தீர்மானங்கள்:

1. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது

2. அடிமைத்தனத்தை மாற்றுவது

3. இந்தியாவின் பாரம்பரியத்தில் பெருமை கொள்வது

4. ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு

5. 2047க்குள் சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை அடைய செய்வது

யோகி ஆதித்யநாத்:

பிரதமர் மோடி ஆகஸ்டு 15 அன்று மக்களுக்கு ஐந்து தீர்மானங்களை வழங்கியுள்ளார் எனவும்  தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் இத்தீர்மானங்களை மனதி வைத்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.  கடமையின் பாதையில் சென்றால் இந்தியா நிச்சயமாக வல்லரசாக மாறும் எனவும் வரும் நாட்களில் இந்தியா உலகை வழிநடத்தும் எனவும் கூறியுள்ளார் ஆதித்யநாத்.

இந்திய மக்கள் அனைவரும் இந்தியாவை வல்லரசாக்க இந்த ஐந்து தீர்மானங்களையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.