இந்திய மொழிகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு நடிகர் கிச்சா சுதீப் வரவேற்பு!

இந்திய மொழிகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு நடிகர் கிச்சா சுதீப் வரவேற்பு!

இந்திய மொழிகள் குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு நடிகர் கிச்சா சுதீப் வரவேற்பு தெரிவித்துள்ளார். பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது இந்திய மொழிகள் அனைத்தும் தனித்துவமானது என்றும் அவை அனைத்துமே நாட்டின் அடையாளம் என்றும் பாஜக அனைத்து மொழிகளுக்குமானது எனவும் தெரிவித்திருந்தார்.  

இந்தியாவில் மொழி தொடர்பான சர்ச்சை அவ்வபோது தலைதூக்கும் நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பிரதமர் மோடியின் கருத்து அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. தேசிய மொழி தொடர்பான சர்ச்சையில் சமீபத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இடையே வார்த்தை போர் முற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது, இந்த நிலையில் பிரதமர் மோடியில் மொழி குறித்த கருத்துக்கு நடிகர் கிச்சா சுதீப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.