"FASTag" மூலம் இவ்வளவு கோடி வருவாயா...? மத்திய அரசு தகவல்

"FASTag" மூலம்  இவ்வளவு கோடி வருவாயா...? மத்திய அரசு தகவல்

2021-2022 நிதியாண்டில் சுங்கச் சாவடிகளில் "FASTag" மூலம் கிடைக்கும் வருவாய் 5 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும்  மொத்த வருவாய் 26 ஆயிரத்து 622 கோடி எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி  தெரிவித்துள்ளார்.

மேலும்  "FASTag" மூலம் 2019-20ம் ஆண்டில் 10 ஆயிரத்து 728 கோடி ரூபாயும், 2020-21ம் ஆண்டில் 20 ஆயிரத்து 837 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக கூறினார்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் "FASTag" வசூல் அதிகரித்துள்ளதா?  கடந்த மூன்று ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட தொகை  எவ்வளவு என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துபூர்வமாக  எழுப்பிய கேள்விக்கு  மத்திய அமைச்சர் கட்காரி இந்த பதிலை அளித்தார்.