மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை அமல்... ஒரே நாளில் 1.80 லட்சம் பேர் பதிவு...

மத்திய அரசின் புதிய தடுப்பூ கொள்கை அமல்படுத்தப்பட்ட முதல்நாளிலேயே சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் பதிவு

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை அமல்... ஒரே நாளில் 1.80 லட்சம் பேர் பதிவு...
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் தடுப்பூசி வேண்டி கோவின் செயலியை பயன்படுத்தியுள்ளதாக தடுப்பூசி நிர்வாகத்திற்கான அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் டாக்டர் ஆர். எஸ். சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கையின் கீழ் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஆர். எஸ். சர்மா, முதல்நாளில் சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் தடுப்பூசி வேண்டி கோவின் செயலியை பயன்படுத்தியதாகவும், ஒரே நாளில் சுமார் 86 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த எண்ணிக்கை சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகைக்கு ஈடானது என கூறினார்.