கேரளாவில் கனமழையால் மண்ணுக்குள் புதைந்த கிணறு...இணையத்தில் வைரலான காட்சி ...!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே கனமழையால் கிணறு ஒன்று மண்ணுக்குள் புதைந்துள்ளது. அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் காசர்கோட்டிலிருந்து க்ஷமங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அணங்கூர் பகுதி உள்ளது. இங்கு  கட்டப்பட்ட பொதுக் கிணறு, அப்பகுதியில் உள்ள மக்களால் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கிணறு ஏற்கனவே உள்வாங்கி இருந்தது. இந்த காரணத்தினால் கிணறானது திடீரென மண்ணுக்குள் புதைந்துள்ளது. இக்காட்சியை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோ பதிவு செய்து பகிர்ந்துள்ளார். அது தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.