பசுக்களை தொடர்ந்து தாக்கும் ஒற்றை புலி… புகைப்படங்கள் வைரல்!

கேரளா மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வருடத்தில் 30 மாடுகளை புலி தாக்கி கொன்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசுக்களை தொடர்ந்து தாக்கும் ஒற்றை புலி… புகைப்படங்கள் வைரல்!
Published on
Updated on
1 min read

கேரளா மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வருடத்தில் 30 மாடுகளை புலி தாக்கி கொன்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மூணாறு தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களின் வருமானத்திற்காக வீடுகளில் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாட்டு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் பால் விற்பனை செய்து தங்களின் குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் குடும்ப செலவிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இங்குள்ள மாடுகளை புலி தொடர்ந்து தாக்கி கொன்று வருகிறது. அதாவது ஒரு வருடத்தில் மட்டும் புலி சுமார் 30 மாடுகளை தாக்கி கொன்றுள்ளது. இதனால் மூணாறு தேயிலை தோட்டப்பகுதியில் தங்களின்  கால்நடைகளை காப்பாற்ற முடியாமல் போகும் நிலையில் உள்ளதாக கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புலியை பிடித்து வேறு இடத்தில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புலி தாக்குதலால் கடந்த சில ஆண்டுகளாக  பால் விவசாயம்  கடுமையான நெருக்கடியை சந்தித்து வருவதாக சங்கத்தின் தலைவர் குருசாமி தெரிவித்தார்.  பசுக்களை புலி தாக்கி கொல்வதால்  பால் சேமிப்பிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில்  தற்பொழுது  4500 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. 1100 லிட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதற்கு முக்கிய காரணமாக இருப்பது புலி அச்சறுத்தலால் பலர் மாடுகளை விற்பனை செய்து வருகின்றனர் என்றார்.

சமீபத்தில் மாடுகளை வேட்டையாடும் புலியின் புகைப்படத்தை வனத்துறையினர் ரகசிய கேமரா மூலம் பதிவு செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com