2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற புது வியூகம்.. காங்கிரஸ் மூத்த நிர்வாகிளுடன் சோனியா காந்தி ஆலோசனை!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற புது வியூகம்.. காங்கிரஸ் மூத்த நிர்வாகிளுடன் சோனியா காந்தி ஆலோசனை!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் விதமாக, கட்சி மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் அம்பிகா சோனி, திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மக்கன் ஆகியோர் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மேலும், அவரது இல்லத்தில் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோரும் உள்ளனர்.

குறிப்பாக,சோனியா காந்தியின் இல்லத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் உட்பட, பிற தேர்தல்களுக்கு முன்னதாக காங்கிரஸை மீண்டும் உயிர்ப்பிப்பதன் முயற்சியின் முக்கிய பங்கிற்கான சந்திப்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

விரைவில் குஜராத் மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.