ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததில் இத்தனை கோடி அபராதமா?

ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம், கடந்த 6 மாதங்களில் 35 கோடியே 47 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரெயில்வே கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் 12-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டிக்கெட் வாங்காமல் பயணித்த பயணிகளிடம் 35 கோடியே 47 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை கோட்டத்தில் 12 கோடியே 78 லட்ச ரூபாய் வசூல் ஆனதாக குறிப்பிட்டுள்ள தெற்கு ரெயில்வே, திருவனந்தபுரம் கோட்டத்தில் 6 கோடியே 5 ஆயிரம் ரூபாயும், பாலக்காட்டில் 5 கோடியே 52 லட்ச ரூபாயும், மதுரையில் 4 கோடியே 16 லட்ச ரூபாயும், சேலத்தில் 4 கோடியே 15 லட்ச ரூபாயும், திருச்சியில் 2 கோடியே 81 லட்ச ரூபாயும் வசூல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இது தவிர, மாஸ்க் அணியாமல் ரெயில் நிலையங்களுக்கு சென்றவர்களிடம் 1 கோடியே 63 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.