சினிமா பாணியில் நடந்த துப்பாக்கி சூடு.... வைரலாகும் வீடியோ

சினிமா பாணியில் இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கடை ஒன்றை  குறி வைத்து துப்பாக்கியால் சாரமாரியாக சுட்டதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, குமன்புரா என்னும் பகுதியில் அமைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த கடை ஒன்றை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடைபெற்றபோது கடையின் உரிமையாளர் கடையினுள் இருந்ததாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயங்கள் ஏதும் இன்றி உயிர்தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக, ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

https://twitter.com/ANI/status/1404658632323571714