இன்னும் 2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி இணையசேவை...அஷ்வினி வைஷ்ணவ் பேட்டி!

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி இணையசேவை...அஷ்வினி வைஷ்ணவ்  பேட்டி!

நாடு முழுவதும் 2 ஆண்டுகளுக்குள் 5ஜி இணையசேவை நடைறைமுறைப்படுத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூறும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப்பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 5ஜி இணையசேவைக்காக 35 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: “நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்” நிச்சயம்...கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு!

மேலும், முக்கியமான தரவுகளில் ஒன்றான சுகாதாரத் தகவல்களை பாதுகாப்பது முக்கியம் எனவும், அதற்கு வலுவான டிஜிட்டல் கட்டமைப்பை நோக்கி நகர்வோம் எனவும் குறிப்பிட்டார்.

இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் இணையசேவையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் ஒன்றரை லட்சம் கிராமங்களில் உயர்தர ஃபைபர் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.