கூட்டணி வைத்த பாவத்துக்கு செல்வாக்கு போச்சி,.. 48 நாள் ஆகியும் அமைச்சரவை பதவியேற்கவில்லை,. குமுறும் ரங்கசாமி.! 

கூட்டணி வைத்த பாவத்துக்கு செல்வாக்கு போச்சி,.. 48 நாள் ஆகியும் அமைச்சரவை பதவியேற்கவில்லை,. குமுறும் ரங்கசாமி.! 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.ஜ கூட்டணியில் பாஜக, அதிமுக,  மற்றும் என்ஆர் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து  போட்டியிட்டது. இதில், பாஜக ஆறு இடங்களிலும், என் ஆர் காங்கிரஸ் பத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. 

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும் மே 7ஆம் தேதி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து எம்.எல்.ஏ,கள் மற்றும் நியமன எம்.எல்.ஏ,கள் கடந்த 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் 48 நாட்கள் ஆகியும் இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவியேற்காததால் புதுச்சேரி அரசியல் இன்னும் முழுமையடையவில்லை. 

பாஜக தரப்பில் துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும் என வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு முதல்வர் ரங்கசாமி மறுப்பு தெரிவித்ததால், 2 முக்கிய அமைச்சரவை பதவி, சபாநாயகர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதற்கு ரங்கசாமி ஒப்புக்கொண்டதால் பாஜகவை சேர்ந்த செல்வம் சபாநாயகராகப் பொறுப்பேற்றார். 

அதைத் தொடர்ந்து விரைவில் புதுவையில் அமைச்சரவை பொறுப்பேற்கும் என்று நம்பப்பட்ட நிலையில் தற்போது அதில் மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜான்குமாரை பதவி ஆசை காட்டி பாஜக இழுத்தது. மேலும் தேர்தலில் வெற்றிபெற்றால் அமைச்சர் பதவியும் தருவதாக கூறியது. இதை நம்பி பாஜகவுக்கு வந்த அவருக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். 

இதனால் எப்படியும் அமைச்சர் பதவி கிடைத்துவிடும் என்று நம்பி பத்திரிகைகளில் விளம்பரம் எல்லாம் கொடுத்தார். ஆனால் கடைசியில் பாஜக தரப்பு அமைச்சர்கள் லிஸ்டில் ஜான்குமார் பெயரே இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜான்குமார் பாஜக தலைமையிடம் இதுகுறித்து கேட்டபோது சுழற்சி முறையில் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ஜான்குமார் ஆதரவாளர்கள் புதுவை பாஜக அலுவலகத்தை சூறையாடினர். 

"மேலும் அமைச்சர் உதவி உங்களுக்குதான்னு டெல்லியில சொன்னாங்க, ஆனால் இப்போ பதவி கிடையாது என்று சொல்கிறார்கள்" என்று ஜான்குமார்  தனது ஆதரவாளர்களிடம் புலம்பியுள்ளார். பாஜக மேலிடம் ஜான்குமாரிடம் பேசியும் அவர் சமாதானமாகவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு புதுவையில் வலிமையாக இருக்கும் ஜான்குமாரை பகைத்துக்கொள்ள பாஜகவும் தயாராகவில்லை. 

பாஜகவின் இந்த முடிவால் புதுவை முதல்வர் ரங்கசாமியும் கடும் அதிருப்தியில் இருக்கிறார். பாஜகவின் அரசியலால் புதுவையில் தேர்தல் முடிவுகள் வந்து 50 நாள் ஆகவுள்ள நிலையில் இன்னும் அமைச்சரவை அமைக்கமுடியாமல் திணறி வருகிறார். இதன் காரணமாக புதுவை அரசியலில் ரங்கசாமியின் செல்வாக்கும் கடுமையாக சரிந்துள்ளது. 

இதனால் தனித்து போட்டியிட்டால் கூட வெற்றிபெற்று இந்நேரம் அமைச்சரவை அமைத்து இருக்கலாம், இப்படி பாஜகவை கூட்டணியில் வைத்து தனது செல்வாக்கை தானே குறைத்து வருகிறோமே என்று நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம் ரங்கசாமி.