4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்...

4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்...

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நான்கு மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குர்லா மாவட்டத்தின் நாயக் நகரில் உள்ள நான்கு மாடி கட்டடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில், கட்டடத்திற்குள் இருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கிய 7 பேரை மீட்டுள்ளனர்.

சுமார் 25 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது. ஏற்கனவே கட்டடங்கள் பாழடைந்துள்ளதால் காலி செய்யக் கூறி அரசாங்கம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆனால், தொடர்ந்து அதே கட்டடத்தில் மக்கள் வசித்து வந்ததால், தற்போது விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.