ஆகஸ்ட் மாத இறுதியில் 3-வது அலை இந்தியாவை தாக்கும்!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா 3-வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. 

ஆகஸ்ட் மாத இறுதியில் 3-வது அலை இந்தியாவை தாக்கும்!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. 

கொரோனா 2வது அலை பேரழிவுக்கு பின் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால், மாநிலங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக புதிய தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. 

இந்தநிலையில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 3வது அலை வீசக்கூடும் எனவும், அதேவேளையில் இது கடந்த அலையை போல மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோய் நிபுணத்தலைவர் சாமிரான் பாண்டா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த புதன் கிழமை நடந்த மாநாட்டில் பேசியிருந்த உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ராஸ் அதானம் ஜெப்ரியேஸஸ், மூன்றாவது அலையின் துவக்கத்தில் உலக மக்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது பொது சுகாதாரத்திலும் தொய்வு காணப்படுவதால் தொற்று மற்றும் உயிர்பலி அதிகரித்து வருவதாகவும், வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், புதிய தொற்று பாதிப்புக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.