3000 மருத்துவர்கள் ராஜினாமா: பரபரப்பு பின்னணி!

3000 மருத்துவர்கள் ராஜினாமா: பரபரப்பு பின்னணி!

வேலை நிறுத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, மத்தியபிரதேசத்தில் 3,000 மருத்துவர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

மத்தியபிரதேசத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரியும், கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கடந்த மாதத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு மாநில அரசு செவிசாய்க்காததை அடுத்து கடந்த திங்கள் கிழமை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் செய்கையை கண்டித்த உயர்நீதிமன்றம், வேலை நிறுத்தம் கண்டனத்திற்குரியது என்றும், பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்தநிலையில் நீதிமன்றத்தின் கண்டனத்தை எதிர்த்து ஜூனியர் மருத்துவர்கள் சுமார் 3,000 பேர் பணியை ராஜினாமா செய்து, தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.