நான்கு ஆண்டில் மூன்று முதல்வர்கள்..பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்.! 

நான்கு  ஆண்டில் மூன்று முதல்வர்கள்..பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்.! 

உத்தரகாண்டில் 4 ஆண்டு ஆட்சிக்காலத்திற்குள் பாஜக 3 பேரை முதல்வராக்கியுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

 உத்தரகாண்ட் முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த தீரத் சிங் ராவத், அரசியல் நெருக்கடி காரணமாக பதவி விலகுவதாக கூறி, அம்மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10 ஆம் தேதி தான்  பொறுப்பேற்றார். ஆனால் மூன்று மாதங்களிலேயே அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த திடீர் முடிவு குறித்து அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்" உத்தரகாண்டில் 4 ஆண்டு ஆட்சிக்காலத்திற்குள் பாஜக 3 பேரை முதல்வராக்கியுது. இது அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். நெருக்கடி மற்றும் கொரோனா காரணமாக இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தீரத் சிங் கூறியிருப்பது பொய் . இதற்கு முன் இதே கொரோனா காலக்கட்டத்தில் தான் சால்ட் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.