ஒரே வீட்டில் 2 மனைவிகள்... 3வது திருமணத்திற்கு அடிப்போட்ட கணவர்.. பிறப்பு உறுப்பை கத்தியால் துண்டாக்கி கொலை

2 பெண்ணை திருமணம் செய்த மதகுரு, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுவந்த நிலையில் கணவரின் பிறப்பு உறுப்பை கத்தியால் சிதைத்து இரண்டாவது மனைவி துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே வீட்டில் 2 மனைவிகள்... 3வது திருமணத்திற்கு அடிப்போட்ட கணவர்.. பிறப்பு உறுப்பை கத்தியால் துண்டாக்கி கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் அருகே உள்ள ஷிகர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மவுல்வி வகில் அஹ்மத். 57 வயதாகும் இவர் ஒரு மதகுரு. இவர் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மவுல்வி வகில் அஹ்மத், 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக இரண்டு மனைவிகளிடம் தெரிவித்த போது மனைவிகள் இருவருக்கும், மதகுருவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

2 மனைவியின் அரவணைப்பு போதாது என நினைத்த மதகுரு 3வது திருமணம் செய்து கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறார். மதகுருவின் இந்த முடிவு, அவருடைய இரண்டாவது மனைவியான ஹஸ்ராவிற்கு கடுமையான கோபத்துடன் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஏற்படவே ஹஸ்ராவை அவர் கடுமையாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அன்றிரவு மதகுருவான மவுல்வி வகில் அஹ்மத், தூங்கிய பிறகு, கோபத்தில் இருந்த அவருடைய இரண்டாவது மனைவி ஹஸ்ரா, கத்தி ஒன்றை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த அவருடைய கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்நிலையத்துக்கு புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் விரைந்து வந்த போலீசார் மதகுரு கொலை செய்யப்பட்டதை அறிந்தனர், பின்னர் மதகுருவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலையை செய்த ஹஸ்ராவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.