ஆஸ்கருக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை - அவையில் கார்கே பேச்சு!

ஆஸ்கருக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை - அவையில் கார்கே பேச்சு!

லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் 2ம் நாளாக மக்களவையும் மாநிலளங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வின் 2ம் நாள் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. அதானி விவகாரம், எல்ஐசி பங்குகள் விற்பனை தொடர்பாக முன்னதாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், BRS, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திலும், காந்தி சிலை முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து மக்களவை கூடிய நிலையில், இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக ஆளுங்கட்சிகள் கேள்வியெழுப்பின. இதையடுத்து எதிர்கட்சிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கடும் அமளியால் மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க : ஆஸ்கர் விருது எதிரொலி...’ரகு’ யானையை காண குவியும் வெளிநாட்டினர்!

அதேநேரத்தில் மாநிலங்களவை தொடங்கியபோது, ஆஸ்கரை வென்ற இரு இந்திய படைப்புகளுக்கு பாஜக எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இதற்கும் மத்திய அரசிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சாடினார். இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர், இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பிரகலாத் ஷோஷி உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் அதானி விவகாரம் தொடர்பாக மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் அமளி தொடர்ந்ததால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

கூட்டத்திற்கு முன்னதாக மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, அனுராக் தாகூர், நிதின் கட்காரி உள்ளிட்டோரிடம் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.