29-வது நாளாக பாரத் ஜோடா யாத்ரா பயணம்.. இன்று காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு..!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணம் தொடர்கிறது..!

29-வது நாளாக பாரத் ஜோடா யாத்ரா பயணம்.. இன்று காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு..!

பாரத் ஜோடா யாத்ரா:

பாரத் ஜோடா யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைக்கான பயணம் என குமரி முதல் காஷ்மீர் வரை 21 மாநிலங்களில் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தி வருகிறது. தமிழ்நாடு, கேரளாவுக்குப்பின் கர்நாடகாவில் பயணம் தொடர்ந்து வந்தது. 

சோனியா காந்தி பங்கேற்பு:

இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி 2 நாட்கள் இடைவெளிக்குப் பின் 29-வது நாளாக கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இன்று ராகுல்காந்தி பயணத்தைத் தொடங்கினார். இன்றைய பயணத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டார்.

உற்சாக வரவேற்பு:

உடல்நலக்குறைவால் வெளிநாட்டில் சிகிச்சையை முடித்து நாடு திரும்பிய அவர், இரு நாட்களுக்கு முன்னரே கர்நாடகா வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் இருவருக்கும் ஆராவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.