காண்டாமிருகம் தாக்குதலில் 2 பேர் படுகாயம்...

காண்டாமிருகம் தாக்குதலில் 2 பேர் படுகாயம்...

அசாமில் காண்டாமிருகம் தாக்கியதல் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். அசாம் மாநிலம் கோலகட் மாவட்டத்தில் மோஹிமா காவோன் என்ற இடத்திற்கு வந்த காண்டாமிருகம் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டி விரட்டி தாக்கியது.

இதனால் அச்சமடைந்த அவர்கள் கூச்சலிட்டவாறு சிதறி ஓடினர். இதனையறிந்த அப்பகுதியினர் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் காண்டாமிருகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

அப்போது, இரண்டு வனத் துறை அதிகாரிகள் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை... என்ன ஆனது?