இந்தியா, சீனா இடையேயான 15-வது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு.. எல்லை பிரச்சனை முடிவுக்கு வருமா?

இந்தியா, சீனா இடையேயான 15-வது சுற்று பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியா, சீனா இடையேயான 15-வது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு..  எல்லை பிரச்சனை முடிவுக்கு வருமா?

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா-சீன படைகளிடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த ராணுவ ரீதியிலான, தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகளால், பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகள், கல்வான், கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டன.

இந்நிலையில் எஞ்சிய பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்து இந்தியா சீனா இடையே 15 வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கிழக்கு லடாக்கின் சுஷுல் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையேயான ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. சுமார் 13 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் இருந்தும் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.