சபரிமலையில் மகர விளக்கு சீசனில் 147 கோடி ரூபாய் வருமானம் - கோவில் நிர்வாகம்

மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் 147 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் மகர விளக்கு சீசனில் 147 கோடி ரூபாய் வருமானம் - கோவில் நிர்வாகம்

மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் 147 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதியை தரிசனம் செய்தனர். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மகரவிளக்கு காலம் முடிவடைந்ததையடுத்து, இன்று காலை 6. 30 மணியளவில் கோவில் நடை சாத்தப்பட்டது.

இதை தொடர்ந்து மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது.  இந்த நிலையில் நடப்பாண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் இதுவரை 147 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.