தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு.. சிமெண்ட் மூட்டைகளின் பழு தாங்காமல் சுவர் இடிந்து விழுந்தது விசாரணையில் அம்பலம்

குஜராத்தில், தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்த நிலையில், அடுக்கி வைக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகளின் பழுவால் சுவர் இடிந்து விழுந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு.. சிமெண்ட் மூட்டைகளின் பழு தாங்காமல் சுவர் இடிந்து விழுந்தது விசாரணையில் அம்பலம்

குஜராத்தின் மோர்பி பகுதியில் தனியார் உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த ஆலையின் ஒரு பகுதியில் ஊழியர்கள் நேற்று உப்பு பொட்டலமிட்டு கொண்டிருந்தபோது, திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை விரைந்து மீட்டனர்.

இதனிடையே சம்பவம் அறிந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி,  உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் சிமெண்ட் மூட்டைகளின் பழுவால் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.