ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டிலிருந்து 12 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி பறிமுதல்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டிலிருந்து 12 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி பறிமுதல்!

பஞ்சாப் மாநிலத்தில் லஞ்சம் வாங்கி குவித்த ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லி, லஞ்சம் வாங்கியதாக கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சண்டிகரில் உள்ள சஞ்சய் போப்லி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதில், தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் உள்பட மொத்தம் 12 கிலோ தங்கம், மூன்று கிலோ வெள்ளி, 4 ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே, ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லியின் மகன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரி சாஹல் தெரிவித்துள்ளார்.