ஹிஜாப் தடையால் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை புறக்கணித்த மாணவிகள்!!

ஹிஜாப் தடையால் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை புறக்கணித்த மாணவிகள்!!

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பலர்  தேர்வுகளை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப்போடு பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் வாயிலிலேயே தடுத்து நிறுத்தியதால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டாம் நாளான இன்று ஷிவமோக்கா நகரில் ஹிஜாப்புடன் மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுத்ததால் ஏராளமான இஸ்லாமிய மாணவிகள் தங்கள் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை புறக்கணித்து சென்றனர்.

இதேபோல் உடுப்பி பகுதியிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து பள்ளிக்குள் தங்களை அனுமதிக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.