கே.ஆர்.எஸ். அணையிலிருந்து மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடாகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையிலிருந்து மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கே.ஆர்.எஸ். அணையிலிருந்து மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

கர்நாடாகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணையிலிருந்து மாலைக்குள் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை முதல் அங்குள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தமாக  5,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே கே.ஆர்.எஸ் அணை இன்று முழு  கொள்ளளவை எட்டிவிடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக மாலைக்குள்  10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுமார் 124 புள்ளி 80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையில்  நீர் இருப்பு 124 புள்ளி 50 அடியாகவும், நீர் வரத்து 11,345 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 3,600 கன அடியாகவும் உள்ளது.