BMW-வை தொடர்ந்து இன்னொரு கார் வாங்கிய விஜே மணிமேகலை..இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா ?

தன் வாங்கிய புது காரின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள மணிமேகலைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

BMW-வை தொடர்ந்து இன்னொரு கார் வாங்கிய விஜே மணிமேகலை..இந்த காரோட விலை எவ்ளோ தெரியுமா ?

குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி புகழ், அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி உள்ளனர். அதே போல சமீபத்தில் ஷிவானி பிஎம்டபிள்யூ காரை வாங்கி இருந்தார். அவரை தெடர்ந்து தாடி பாலாஜியும் பிஎம்டபிள்யூ காரை வாங்கி இருந்தார். இந்த நிலையில் தாடி பாலாஜியை தொடர்ந்து மணிமேகலையும் பிஎம்டபிள்யூ காரையும் வாங்கி இருந்தார். மணிமேகலை உசேன் என்ற நடன கலைஞரை காதலித்து வந்தார்.மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். 

மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இதனையடுத்து இந்த தம்பதி யூடுயூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அந்த சேனலை 1.39 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர்கள் போடும் பல வீடியோக்கள் பல லட்சம் பார்வையாளர்களை குவித்து வருகிறது. இவர்கள் யூடுயூப் மாத வருமானம் மட்டும் 6 லட்சம் என்று கூறப்படுகிறது. 

இப்படி ஒரு நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கி இருந்தார். அதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மற்றொரு புதிய காரை வாங்கி இருக்கின்றனர்.  இந்த ஹூண்டாய்   காரின் விலை 7 முதல் 11 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.