வெந்து தணிந்தது காடு.. ரசிகர்களுக்கு நன்றிய போடு.. ஏ.ஆர்.ரகுமானின் ட்வீட்டால் குளிர்ந்த ரசிகர்கள்..!

4 நாட்களில் ரூ.50கோடியை தாண்டி வசூல் சாதனை புரிந்து வரும் வெந்து தணிந்தது காடு..!

வெந்து தணிந்தது காடு.. ரசிகர்களுக்கு நன்றிய போடு.. ஏ.ஆர்.ரகுமானின் ட்வீட்டால் குளிர்ந்த ரசிகர்கள்..!

வெந்து தணிந்தது காடு:

சிம்பு நடிப்பில், கௌதம் வாசுதேவ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடந்த 15-ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. ஒரு முள்காட்டில் வேலை பார்த்து வரும் இளைஞன், பாம்பே சென்று தவறுதலாக அடிதடியில் இறங்கி, அங்கு எப்படி டான் ஆகுகிறார் என்பது தான் படத்தின் கதை. 

சிம்புவின் டிரான்ஃபர்மேஷன்:

கௌதம் வாசுதேவ் என்றாலே காதல் கதைக்கு பெயர் போனவர் என்றிருந்த பெயரை, என்னால் கேங்ஸ்டார் படத்தையும் எடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கௌதம். சிம்புவின் உடல் டிரான்ஃபர்மேஷன் தான் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ப்ரோமோஷனாக இருந்தது. 

சுண்டி இழுத்த பாடல்கள்:

படத்திலிருந்து வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் படத்திலிருந்து வெளியான ஒரு ஒரு பாடல்களும் இளைஞர்களை சுண்டி இழுத்தது. இந்த மாதம் தொடக்கத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்தின் பாடல்களை பாடி அசத்தினார். 

4 நாட்களில் ரூ.50கோடி வசூல்:

பாடல்கள் சாதாரணமாக கேட்டதை விட படத்தோடு ஒன்றி கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர். படம் வெளியான 4 நாட்களில் 50 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

அனைவருக்கும் நன்றி:

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”பொதுமக்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. வெந்து தணிந்தது காடு படத்தின் இசைக்கு நீங்கள் கொடுத்த பாராட்டுக்கும், அன்புக்கும், படகுழுவுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.