மகா கலைஞன் பாரதிராஜாவுக்கு வைரமுத்துவின் வரிகள்..! மக்களைக் கவர்ந்த பதிவு..!

மகா கலைஞன் பாரதிராஜாவுக்கு வைரமுத்துவின் வரிகள்..! மக்களைக் கவர்ந்த பதிவு..!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவை நேரில் சந்தித்துள்ளார் வைரமுத்து.

பிறந்தநாளில் மருத்துவமனையில்:

தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற இந்திய மொழி பேசும் மக்களுக்கும் நன்கு பரிச்சயமானவர் இயக்குனர் சிகரம் பாரதிராஜா. ஆகஸ்ட் 23 இல் 80 வயதை அடைந்த அவர், பிறந்த நாளைக் கூட கொண்டாட முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஓயாத உழைப்பு;

80 வயதைக் கடந்தாலும், அவரது அயராத உழைப்பு இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குனரான பாரதிராஜா, சமீபகாலமாக நடிப்பிலும் அசதி வருகிறார். அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்திருந்தார். 

மேலும் படிக்க: இளையராஜாவை தொட்டுத் தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம் : இயக்குநர் பாரதிராஜா பேச்சு !!

வைரமுத்து சந்திப்பு:

பாரதிராஜாவின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை எழுதி கொடுத்தவர் பாடலாசிரியர் வைரமுத்து. பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்து அவர் சந்திக்கு மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளார் வைரமுத்து.

மீண்டு வருவார்:

பாரதிராஜாவை சந்தித்ததை தன்னுடைய பாணியில், கவிதையாகவே பதிவிட்டுள்ளார் வைரமுத்து. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், 


”பாரதிராஜா
மருத்துவமனையில்
பாரதிராஜாவைப் பார்த்தேன்

நலிந்த நிலையிலும்
நகைச்சுவை தீரவில்லை

சின்னச் சின்னப்
பின்னடைவுகளைச் சீர்செய்ய
சுத்த மருத்துவர்கள்
சூழ நிற்கிறார்கள்

அல்லி நகரத்தை
டில்லி நகரத்திற்கு
அழைத்துச் சென்ற
மகா கலைஞன்
விரைவில்
மீண்டு வருவார்
கலையுலகை 
ஆண்டு வருவார்” என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவு மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாரதிராஜா விரைவில் நலம்பெற வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.