வைரமுத்து என்றால் பொங்குறீங்க.? தனுஷ்,அனிருத் என்றால் ஏன் பம்முரிங்க.? -சின்மயிக்கு சமூகவலைத்தளத்தில் ஒரு கேள்வி.! 

வைரமுத்து என்றால் பொங்குறீங்க.? தனுஷ்,அனிருத் என்றால் ஏன் பம்முரிங்க.? -சின்மயிக்கு சமூகவலைத்தளத்தில் ஒரு கேள்வி.! 

வைரமுத்து மேல் சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் வைரமுத்து மீதும் சின்மயி மீதும் பலர் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.பி.பி பள்ளி பாலியல் சம்பவத்தை திசை திருப்பவே சின்மயி மீண்டும் வைரமுத்து விவகாரத்தை பேசுகிறார் என அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில் வைரமுத்து மீது  சின்மயி 3 ஆண்டுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு பின்னால் பிற்படுத்தப்பட்ட,  பட்டியலின பெண்களுக்கு பல முறை பல நேரங்களில் பாலியல் தொந்தரவுகள் நடந்திருக்கிறது. பல பள்ளியிலும் பாலியல் புகார் வந்திருக்கிறது. மிக முக்கியமாக பொள்ளாச்சி கொடூரம் நடந்திருக்கிறது.


ஆனால் அப்போதெல்லாம் அமைதி காத்த சின்மயி PSBB பள்ளி பிரச்சனையை பற்றி திமுக தலைவர் கனிமொழி பேசியதுமே " எனக்கு வைரமுத்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரே அதை பேசுனீர்களா " என்கிறார். தொடர்ச்சியாக வைரமுத்துவை பற்றியே பேசுகிறார். இது போன்ற காரணங்களால் PSBB பள்ளி நிர்வாகத்தின் மீது தீவிரமாக எதிர்ப்பு வருவதை சின்மயி திசை திருப்புகிறார்.

மேலே சொன்னது போல கடந்த  3 ஆண்டுகளில் வைரமுத்து பற்றி வாய்திறக்கவே இல்லை PSBB விவகாரம் வரும் போது மட்டுமே அதை பேசுகிறார். அடுத்ததாக கேரளாவில் வைரமுத்துவிற்கு விருது அறிவிக்கிறார்கள் அங்கிருக்கும் நடிகையான பார்வதி அதை எதிர்க்கிறார் - நம்மவர்களும் அதை எதிர்த்தார்கள் PSBB விவகாரத்தின் வீரியம் குறைந்து வைரமுத்து பேசும் விசயமாக்கப்படுகிறார். உங்களுக்கு நினைவிருக்கிறதா?


நடிகை சுசித்ரா சுசீலீக்சில் நடிகர் தனுஷ் அனிருத் குறித்து பாலியல் செய்திகளை வெளியிட்டார். அதாவது போதையில் நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதே போல அனிருத்தின் புகை படங்களே வெளியாகின. இவையெல்லாம் பெரிதாக பேசபடவில்லை. இவையெல்லாம் நடந்த பின் தான் நடிகர் தனுசுக்கும் - அனிருத்துக்கும் பல விருதுகள் வழங்கப்பட்டன. பார்வதி போன்ற நடிகைகள் வைரமுத்துவை எதிர்ப்பது போல தனுஷையோ அனிருத்தையோ எதிர்க்கவில்லை. ஆதாரங்களோடு பாலியல் குற்றச்சாட்டுள்ள  நடிகர்களுக்கு எதற்காக தேசிய விருது கொடுக்குறீங்க என்று யாருமே பேசவில்லை.


வைரமுத்து மீது பல பெண்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள் பொது வெளியில் அதை மதிக்க வேண்டும் புகார் அளிக்கப்பட்டால் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கட்டும் அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் சிலருக்கு ஒரு பிரச்சனை வரும் போது மட்டுமே சின்மயி வைரமுத்து பிரச்சனையை திரும்ப திரும்ப பேசுகிறார். அந்த சிலர் மீதான வலுவான குற்றச்சாட்டுகளை மக்கள் மனதிலிருந்து மலுங்கடிக்க செய்கிறார்.


இப்போது காயத்ரி விஷால் மீது கருப்பர் கூட்டம் பிரச்சனையின் வீரியத்தையும் - திருமா பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்கிற பிரச்சனையையும்  அதன் வீரியம் குறையாமல் தேர்தல் வரை பார்த்து கொண்டார்கள். ஒரு வாரம் கூட இந்த PSBB பிரச்சனையை நம்மால் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை . இவர்களின் நுண்ணரசியலை பொறுமையாக கவனித்து பாருங்கள். பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம்." இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.