துக்ளர் தர்பார் பட இசை வெளியீடு தேதி அறிவிப்பு..!

அரசியல் கதைகளத்தில் உருவாகும் துக்ளக் தர்பார்..!

துக்ளர் தர்பார் பட இசை வெளியீடு தேதி அறிவிப்பு..!

அரசியல் கதையம்சத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியுடன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் என பலர் நடிக்கின்றனர். புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

 

தற்போது இந்தப் படத்தின் இசை வெளியீடு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன் படி, துக்ளக் தர்பார் படத்தின் இசை நாளை ( 18.08.2021 ) மாலை 6 மணிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக நடிகர் விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பகிர்ந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால், படம் நேரடியாக ஓடிடி தளத்திலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.